
வாழ்கையில் இன்பம் துன்பம் என்பது இருக்கத்தான் செய்யும், நாங்கள் இவற்றை எம்மைக்கு சாதகம் ஆக மாற்றி எம் வாழ்வை அமைத்தல் வேண்டும். என் கண்ணீரின் மத்தியில் மனக்கண்ணாடி முன் பார்கிறேன் - சுற்றத்துக்கு அழகு சூழ இருத்தல். அந்த சூழலில் இருந்து எம்மை தாயாக பார்த்தவர் தான் லட்சுமி மைத்துனி ஆவார். எமது தாய் நலம் இன்றி இருந்த போது எல்லாம் எமக்கு தாய்க்கு தாயாக இருந்ததை மறக்க முடியாது. இளமை காலம் தொடங்கி அவரின் மண வாழ்க்கை தொடர அதன் பின்னால் நிகழ்வுகளையும் மனத்திரையில் ஓட நான்கு நாயகங்களையும் சுமித்திரா என்ற செல்வ புதல்வியையும் பெற்ற பிக்காலத்தில் அவரின் வாழ்வு நிறைவாக அமைந்தது. எதையும் தாங்கும் இதயம் படைத்த அவருக்கு கணவனையும் மதுராவையும் இழந்த நீண்ட மனத்துயரை என்னுடன் பகிர்ந்ததை நினைவில் கொள்கிறேன். திருநீற்றின் மகிமை சொல்லும் அவரின் அழகிய முகம் என்றும் என் முன்னே நிற்க அவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ******************************************************************** சரவணமுத்து ஆசிரியர் குடும்பம் கைதடி , இஸ்கந்தவதனன் குடும்பம் இங்கிலாந்து

இறைபதம் அடைந்த எனது மைத்துனி இலட்சுமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்,அன்னாரின் பிரிவாழ் துயர் உற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி சாந்தி!