
யாழ். தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வியகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி(லண்டன்), கருணாகரன்(ஜெர்மனி), மனோகரன், கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலகிருஸ்ணன், செல்லகுமரன், சிவகெளரி, விஜயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயிதன், சாருஜன், சங்கரன், சாய்கரன், சாய்கீர்த்திகன், ஜோதிகா, வர்சிகா, டிலக்ஸ்சிகா, தில்லயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெல்லண்டை அம்மனை பிரார்த்திக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.