பத்துமாதம் சுமந்தது மட்டும் இன்றி என்னப்பெற்று எடுத்த பின்னும் நெஞ்சினிலும் சுமந்தாயே.... எத்தனை கஸ்ரம் என்றாலும் உன் மடியில் படுத்தால் கஸ்ரம் தீரும் மருந்தாக இருந்தாயே.... நீ இல்லை என்ற துக்கம் தீர பல ஜென்மமாகும் அம்மா…. உன்கடசி மூச்சுக் காற்று நின்றபோது கல்லாய் போனது அம்மா என்உடல் கண்ணீர் மட்டும் கரைகின்றது உன் அழகான பாதங்கள் தேடி.... என்னதான் பஞ்சுமெத்தையில் உறங்கினாலும் அம்மா நான் உன்மடியில் உறங்கிய நாட்கள் எப்போது வரும் தாயே.... உன்தன் கருவறை தந்த நின்மதி எனது கல்லறையிலும் கிடைக்காத தவமான வரம் நீ.... ஆயிரம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் கொண்டு குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாது இருக்க வேர் என இருந்தயே அம்மா.... மாயப்புயல் வடிவில் காலன் அவன் உயிர் பறித்து சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன அம்மா ஒரு வார்ததை கூட என்னிடம்.... உன்னை கானும் நாள்வரை காத்திருக்கும் அன்பு மக்கள்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.