1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 13-10-2021
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமணி கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
அன்னாரின் ஓராண்டு நினைவஞ்சலி 13-10-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே! வானில் விண்மீனால் இருந்து எம் வாழ்வை வளப்படுத்துவீரே..!!!