3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா பொன்னுத்துரை
வயது 60
அமரர் கந்தையா பொன்னுத்துரை
1958 -
2018
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னுத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயரம்!
நினைவுகள் எங்கள் மனதில்
என்றொன்றும் நிறைந்திருக்கும்
கண்ணை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை
கண்முன்னே வருவாயா
கதறுகின்றோம் ஐயா
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம் ஐயா
கல்லைறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது ஐயா
எங்கள் இதயத்தில் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் கலைந்து போகாது
தகவல்:
குடும்பத்தினர்