வவுனியா நெடுங்கேணி மருதோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மசோதி அவர்களின் நன்றி நவிலல்.
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாக எங்கள் வாழ்வின் வழி காட்டியாய் திகழ்ந்து எம்மைவிட்டுப் பிரிந்து இறைபதம் எய்திய எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு கிருஷ்ணபிள்ளை பத்மவனிதா
அன்னார் நோயுற்ற செய்தி அறிந்து வைத்தியசாலைக்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் அன்னாரின் மறைவுற்ற செய்திகேட்டு அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி மூலம் வெளியிட்டவர்களுக்கும் தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எங்கள் துக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அதே போல் இலங்கையிலும் அன்னாரின் துயரத்தில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்.
பல மைல்கடந்தும் பார்வையாளர்கள் மண்டபத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியவர்காளுக்கும் மற்றும் சக உதவிகள் புரிந்து எங்களுக்கு வழி காட்டியவர்களுக்கும் இறுதி கிரியைகளிலும் தேவையான உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அறிந்தவர்கள் அயலவர்கள் அனைவருக்கும் அந்தியொட்டி நினைவுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளை பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டியாக நின்ற அமைதியான பெருமகன் உங்கள் விழிகள் ஆயிரம் கதைகள் சொல்லும் புன்முறுவலால் அனைவரையும் அடிமைகொண்ட...