வவுனியா நெடுங்கேணி மருதோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மசோதி அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேல் கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சனுசா, நிருதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிருஸ்ணப்பிள்ளை, மங்களம், காலஞ்சென்றவர்களான பரிமளம், யோகநாயகம் காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் யோகம்மா, இராசமணி, காலஞ்சென்ற சாந்தகுணநாயகி மற்றும் பத்ம றஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலக்சுமி, விஜயரட்ணம், காலஞ்சென்ற விஜேந்திரன், பாலசுப்பிரமணியம், சிவகுமார், காலஞ்சென்ற தெய்வேந்திரன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டியாக நின்ற அமைதியான பெருமகன் உங்கள் விழிகள் ஆயிரம் கதைகள் சொல்லும் புன்முறுவலால் அனைவரையும் அடிமைகொண்ட...