Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 01 APR 1938
ஆண்டவன் அடியில் 06 SEP 2021
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம்
B.A, Diploma in Education, MA in Education, ஓய்வுநிலை அதிபர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், ஆசிரியர் நயினாதீவு மகாவித்தியாலயம், வேலணை மத்திய மகாவித்தியாலயம், பத்திரிகை ஆசிரியர் , Former President of Toronto Tamil Seniors Association, President of Sathya Sai Center Wellesley & Parliament
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் 1938 - 2021 யாழ் நயினாதீவு 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய்த் திகழ்ந்த அன்புத் தெய்வம் உயர்திரு. கணபதிப்பிள்ளை சிவராமலிங்கம் அவர்கள் திடீரென சுகயீனமுற்ற வேளையில் அவரைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தவர்கள், அன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரின் மறைவுச்செய்தி கேட்டும் உடன்வந்து வேண்டிய உதவிகள் செய்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உள்ளுரிலும் வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலமாகவும் வலைத்தளங்கள் மூலமாகவும் அனுதபாம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலை, மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து இரங்கலுரை நிகழ்த்தியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அன்னாரின் நினைவாக மெய்நிகர் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்து அவரோடு எழுத்துலகில் பயணித்த எழுத்தாளர்களையும், சான்றோர்களையும், நண்பர்களையும், உறவினர்களையும் இரங்கலுரை நிகழ்த்த ஏற்பாடு செய்த விளம்பர பத்திரிகை நிறுவன உரிமையாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்த உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர்கள் யாவருக்கும் மேலும் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனை 10-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கனடா கந்தசாமி ஆலயத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.