சிற்பாசிரியர்களின் திரு-பூமி திருநெல்வேலி தனிலே பிறந்து வளர்ந்தது மட்டுமல்லாமல், சிற்பாசிரியர்களின் கலாசாரத்தினையும் பண்பாடுகளையும் ஆசாரத்தினையும் தனது புலம்பெயர் நாட்டிலும் முறை தவறாது கடை பிடித்து வாழ்ந்த சிற்பாசிரியரை புலம்பெயர் தமிழ் சமூகம் இன்று இழந்து நிற்கிறது! புலம்பெயர் தமிழர் இவரை பழனி என்றும் ரவி என்றும் அழைப்போம், ரவி அண்ணா கை படாத ஆலயங்கள் நெதர்லாந்து நாட்டில் இல்லை என்றே கூறலாம்.புலம் பெயர் நாடுகளிலே தமிழும் சமயமும் வளர அரும்பாடுபட்ட மகான்! ரவி அண்ணா வைத்தியசாலைக்கு செல்வதற்க்கு 2,3 நாட்களுக்கு முன்பாக சித்திரா பௌர்ணமி நாள் அன்று, நாங்கள் நெதர்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வர வேண்டி இருந்தது, அப்பொழுது ரவிஅண்ணாவின் சுகம் நல்ல நிலையில் இருக்கவில்லை, இருந்தாலும் ரவிஅண்ணாவின் குடும்பம் எங்களை வரவேற்று, சித்திரா பௌர்ணமி விரத சாப்பாடு தந்து, தமிழ் புது வருட கைவியலாம் வெற்றிலையில் வைத்து எங்களுக்கு தந்ததுடன் மனம் உருக , எங்களை வழி அனுப்பி வைய்த்த எங்கள் ரவி அண்ணா மீளா துயில் கொள்ளும் நிலையினை, கண்கள் பார்க்க மறுகின்றன, மனம் ஏற்க மறுகின்றது. புலம்பெயர் தமிழ் சமுதாயம் இழக்க கூடாத கலங்கரை விளக்கை இன்று இழந்து நிற்கிறது! காஞ்சனா அக்காவிற்கும் கவிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பினை தாங்கும் மன உறுதியினை நம்மை படைத்த ஆண்டவனே கொடுத்திடு அப்பா! மீளா துயில் கொள்ளும் ரவி அண்ணாவின் ஆத்மா ஆண்டவனிடம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!