3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை பழனித்துரை
(ரவி)
விஸ்வப்பிரம்மஸ்ரீ சிற்பகலாசூரி
வயது 60

அமரர் கணபதிப்பிள்ளை பழனித்துரை
1961 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-05-2025
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தெய்வமே...
கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு
அன்பாக கல்வியூட்டி, வாழ வழிகாட்டி,
தக்கதுணை தேடி தரணியிலே வாழ
வைத்தவரே உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
மூன்று ஆண்டு கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்