

கந்தசாமி மாஸ்டர் - ஒரு நினைவுப் பதிவலை தமிழ், சமயம் என்ற பாடங்களின் கற்பித்தலை தாண்டி, தமிழ் பேச்சு போட்டிகளுக்கு ஊக்கம் அளித்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். கீரிமலை சிவநெறிக் கழக போட்டிகளில் பள்ளியை பிரதிநிதிப் படுத்தி பரிசில்கள் பெற்ற போது, தட்டிக் கொடுத்த ஆசிரியர்களில் அவரும் ஒருவர். அவரின் பிரம்பின் அளவு, வல்லிபுரம் மாஸ்டரின் அளவுடன் போட்டி போடும். அந்த அளவுக்கு மாணவர் ஒழுக்கத்தில் அக்கறை கொண்டவர்.ஆங்கில கிறுக்கல்களுடன், சில மாணவர்கள் அவரை ஏய்த்ததையும் மறக்க முடியவில்லை. தமிழை, சமயத்தை எந்த மாணவரும் குறைந்து மதிப்பிடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்த உணர்வுமிக்க ஆசிரியர். எனக்கு தெரிந்த இந்த ஒரு வருட காலத்தில் நம் பள்ளிச் சமுகம் இழந்த ஐந்தாவது ஆசிரியர் ?. அவர்களில் இருவரை, சென்ற வருடம் சந்திக்க முடிந்ததில் ஒரு மன விரைவு. பிரபா அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ??? - சிறீதர் (A/L 1988)

Dear KK Praba, Words may not suffice to express the heartfelt sorrow that I feel for the passing of your father. Please accept our heartfelt condolences. Bavaharan & Family