10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
(கனகு)
வயது 66
அமரர் கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
1950 -
2016
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கல்விளான் துனுக்காயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
அப்பப்பா… என் சிறுவயதின் இனிய நினைவுகளாக என் மனதில் என்றும் வாழும் அன்பானவர் நீங்கள். நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை...