2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை யேசுதாசன்
(K.p)
முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயம்- மன்னார்
வயது 70
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை யேசுதாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்