யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டுகளில்
எத்தனை முறை அழைத்திருப்பாய்
என் பெயர் சொல்லி
சிரித்தபடி உன்
புருவம் உயர்த்தி
என் முகம் பார்த்து
ஏன் அது ஏன் இது என்று
என்னென்னவோ
எல்லாம் விசாரித்திருப்பாய்
அண்ணா என்னவாம்
அக்கா கதைச்சாளா
காந்தன் போனவனாமோ
விசிதன்பாடுதான் என்னவோ
பாவம் அவன்தான்
இவள் கத்தினாலும் பாவம்
எல்லாம் செய்து தருவள்
எண்டெல்லாம் எவ்வளவு
கதைச்சிருப்போம்
உன்ட பெட்டை
கதைக்கிறாளா
சிரிக்கிறாளா தவழுறாளா
காட்டவளை ஒருக்கா எண்டும்
தம்பிக்கும் ஒண்டு
பெட்டையோ பொடியனோ
வந்துட்டா போதும்
பாத்துட்டுப் போயிடுவன்
என்ற ஆசையை ஆயிரம்
முறை சொல்லி
அசைபோட்டிருப்பாய்
ஐயோ என்ன அவசரம்
இன்னும் கொஞ்சக் காலமிருந்து
பார்த்து தூக்கிக் கொஞ்சி
மகிழ்ந்திருக்கலாம்
அதற்குள் என்ன அவசரம்
கை கோர்தவனிடத்தே
உயிர் சேர்த்தாயோ
போதும் இனியும்
பொறுக்க முடியாது என்று
வாசல் தேடி வந்து
சென்றவனிடமே படியிறங்கி
வாசல் தாண்டி
நீயும் சேர்ந்தாயோ
பத்திரமாய்ப் பார்த்த
ஆறும் ஆறாத் துயரத்தில்
ஆண்டிரண்டு ஓடியும்
தீராத் துயரத்தில்
நீ தூங்கு தாயே
தாலாட்ட அங்கே உன்
தாயுண்டு தானே
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!