யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி :- 10.12.2021
தாயே உன் ஆசைமுகம் காண
வருவாய் நீயென்று வழிபாத்திருந்தோம்
தருவாய் ஒளி யென்று
முகம் பூத்திருந்தோம்
அழைப்பாய் நீ யென்று
செவி சாய்த்திருந்தோம்...
விழியில் நீர் வற்ற வழி நாம் அறியோம்
ஆண்டும் ஒன்றாக இனி
நாம் என் செய்வோம்
மடியில் உன்னை தாங்கி
மழலை மொழி பேசி
வதனம் நிதம் பாத்து
உன்
சிரிப்பில் நாமெல்லாம் மகிழ்ந்தோம் நாளெல்லாம்
அம்மா ..உன் வரவு எங்கம்மா !..
இதயத் துடிப்பை நீ இடை நடுவே நிறுத்தி
எம்மைத் துடிக்க விட்டு சென்றதென்ன தூரமோ
வருஷம் ஒண்டாச்சே இன்னும் வர என்னவம்மா
நிமிசத்துக்கு மேலானால் எம்மை காணாது துடிப்பாயே
உன் தயக்கம் ஏனம்மா
வா தாயே
வந்தொரு வார்தையாச்சும் பேசிவிட்டு போவம்மா...
கனகம்மா எண்டு செல்லமா
உன் பிள்ளை ஆறும் அழைக்கையிலே
நீ சிந்தும் உன் சிரிப்பு எங்கம்மா....
கனகி எண்டு உன் அக்கா அழைக்கவும்
சின்ன அக்கா எண்டு உன் தங்கை தம்பி அழைக்கவும்
வந்து மின்னி விட்டு போகும் உன் சிரிப்பு எங்கம்மா
சித்தி ஆசை ஆன்டி எண்டதுமே வந்துவிடும்
உன் மந்திரப் புன்னகை எங்கம்மா..
திக்கித் திக்கி-உன் பேரப்பிள்ளைகள்
அம்மம்மா... அப்பம்மா.. என்று
உனைக்காண அழைக்கையிலேனும்
பூவாக உன் முகம் எம் முன் மலராதா
தாயே
எம்முன்னே வரமாக வா தாயே ...
ஓம் சாந்தி தாயே! ஓம் சாந்தி!!