Clicky

அமரர் கனகையா செல்வகுமார் (ராஜன்)
மறைவு - 05 FEB 2020
அமரர் கனகையா செல்வகுமார் 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மாமா 12 FEB 2020 Switzerland

இனிய ராஜானுக்கு துயராழ்ந்த அஞ்சலிகள் ்்்்்்்்் இறப்பு: நேசனே! நினைவிலும் நின்றகலா நித்தியனே!! பிரித்தானியா போன அன்பே! பலகாலம் வாழாது போனாயே? உனது குடும்பத்திற்கு உகந்த இடம் லண்டன் என்றே நினைத்து மகிழ்ந்தோம். ஆனால்,இனி நீ எந்த நாட்டிலும் இல்லை என்பதை எப்படித்தான் நினைத்திருப்போம்? ஏன் நடந்தது உனக்கு??? புலம்பித் தவிக்கிறோம். கேட்கவே கூடாத இந்தத் துயரச் செய்தி சுவிஸில் உள்ள உனது உறவுகளையெல்லாம் சோகத்தில் தள்ளியதே! கதறிக் கனக்கிறோம். உறவுகளைத் தேற்ற வார்த்தையின்றித் தத்தளிக்கிறோம். பிள்ளைகளை ஆறுதல் செய்ய நீயின்றி மூர்ச்சையாகிறோம். சுவிஸில் நடந்த எமது விழாவுக்கு வந்து நீ செய்த அன்பை எப்படி மறப்போம்? நினைவுகளில் உனது குரலும் சிரிப்பின் அலையும் காதுகளுக்குள் ஒலிக்கிறதே? கண்ணீரில் மூழ்கிறோம்! மனைவியும்,வரமாக வர இருக்கும் உனது குழந்தையும் இனி என்ன செய்வார்களோ? உனது இடத்தை நிரப்பவா உனது வாரிசு வரவுள்ளார்? இறைவனின் விளையாட்டில் இதுவும் ஒன்றா? இனி அவர்களுக்கு யார்தான் காவல்? மரணம் யாருக்கும் வரலாம்! அது வாழ்ந்து முடித்தவர்களுக்கான அழைப்பு. வாழத் தொடங்கிய உனக்கு ஏன் வந்ததென்றே புரியாது விக்கித்து நிற்கிறோம். தூயவனே! பாசமிகு இனியவனே!! எம்மோடு இணைந்து எம்மையும் மகிழ்வித்து,இந்த உலகெல்லாம் உறவுகளை உடையோனே! நீ இனி வரவே மாட்டாய் எனும் மரணச் செய்தி எம்மை நிற்கதியாக்குகிறது. போய் விட்டாய்! போயே விட்டாய்!! மேகங்களுக்குள் அமைதியாக உறங்கு ஒருநாள் அங்கே சந்திப்போம். அதுவரை கண்ணீருடன் சிவா (செல்வம்)மாமா லோஜி மாமி குடும்பம் மற்றும் உறவுகள் Grenchen/Switzerland

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 12 Feb, 2020