மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரி பீதாம்பரம் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பாக்கியரெட்ணம் தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பீதாம்பரம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வரதநாதன்(லண்டன்), உருத்திரகுமாரி, சிறிதரன்(லண்டன்), சாந்தினிதேவி, தவஜோதி(ரஞ்சன்- லண்டன்), துஷ்யந்தி(கௌரி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அழகரெட்ணம், வன்னிச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாகினி, இராஜநாதன், புஸ்பராஜினி, சதானந்தன், ரிஷாந்தினி, சரவணபவான் ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரவீணன்(First line Supervisor, Exxon Mobile), சௌமியா(Finance Officer), மதுராங்கன்(பொறியியலாளர், நீர்ப்பாசன திணைக்களம் - பொலநறுவை), ஆரூரன்(இலங்கை வங்கி - களுவாஞ்சிகுடி), சாரங்கன், மாதங்கி, அபிராமி(விவசாய திணைக்களம் - மட்டக்களப்பு), ராகவி, யதூரி, ஆர்த்திகா, சுவேதிகா, Dr. திவ்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஹரிணி அவர்களின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் படுகாட்டார் வீதி, நாவற்குடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குடா இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் போதனை கேட்டோம் பல சாதனை செய்தோம் சிலர் வேதனை தீர்த்து அவர்தம் கவலை நோய் தனைத் துடைத்தோம் ஆனாலும் அங்கு சாதனை செய்த உம் தனயர் தம் வாழ்வில் வேதனை தொடருதே அம்மா அப்பா! இவ் வேதனை தொடர அதில்...