1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 OCT 1939
இறப்பு 04 AUG 2020
அமரர் கனகசபை தியாகராசா 1939 - 2020 புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 24-07-2021

உயிர் கொடுத்த தந்தையே
எங்கள் வரவை எதிர்பார்த்து
வருடங்கள் பல கடந்தும்
நம்பிக்கையுடன் காத்திருந்தீர்கள்
வருடங்கள் ஒன்று
பறந்தோடி மறைந்தது- ஆனாலும்
எம் சந்திப்பின் காத்திருப்பு
காணல் நீராய் போனதே

நம்பிக்கைகள் பொய்த்துவிட
இயற்கையின் அரவணைப்பில்
விழிகள் இரண்டும் நிரந்தரமாய்
உறக்கம் கொள்ள மரணம்
உங்களை அழைத்துக் கொண்டதே
இறுதிப் பயணத்தில் கூட
எம் கடமை செய்வதற்கு
இயற்கையும் தடுத்துவிட்டதே

வருடம் ஒன்று பார்த்திருக்க
நாட்கள் ஒவ்வொன்றாய்
நகர்ந்து சென்றாலும்
உங்கள் பிரிவுத்துயரின்
வலிகளின் ரணங்களை சுமந்து
கனத்த இதயங்களுடன்
உங்கள் நினைவுகளைச் சுமந்திங்கு
நித்தமும் ஏங்கி தவிக்கின்றோம்

மீண்டும் ஒரு முறை
உங்களுடன் இணைந்து வாழ
மனம் ஏனோ ஏங்குகின்றது
காத்திருப்போம் அதற்காய்
காலம் உள்ள வரையில்
காலத்தின் தீர்ப்பிற்காய்

பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி
இருந்தாலும் எம் மனம்
ஏற்க மறுக்கின்றது ஏனோ அதனை

என்றும் உங்கள் நினைவுகளின்
பசுமையான தருணங்களை சுமந்தவண்ணம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: நேசன்(மகன் - ஐக்கிய இராச்சியம்)