Clicky

மண்ணில் 25 APR 1960
விண்ணில் 04 APR 2022
அமரர் கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா)
பத்திரகாளி அம்மன் உரிமையாளர், நாடகக் கலைஞர்
வயது 61
அமரர் கனகசபை சிவலோகநாதன் 1960 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivakumar.Balachandran Family ,Ward no: 2,Pungudutivu/ Toronto,Ontario,Canada 13 APR 2022 Canada

என் பால்ய கால பாடசாலை நண்பனே!!காற்று வழி கிராமத்தின் காவிய நாயகனே !! நான் இன்று தான் லங்காசிறியில் வந்த மரண அறிவித்தலில் உனது படத்தை கண்டு அதிர்ந்து போனேன்.எனது மனம் சொல்லொணா வேதனையில் மாய்ந்து போகிறது.உன்னை கடைசியாக நான் பார்த்தது கனடாவில் நடந்த நம் உறவினர் திருமண நிகழ்வில்(ரவிவண்ணன் -இலக்கியா தம்பதிகள் திருமணம் ) ஜூன் மாதம் 18ம் நாள் வருடம் 2018.அன்று என்னை கண்டதும் சூரியனை கண்ட தாமரை மலர் மலர்ந்து நிற்பது போல் உன் முகம் மலர்ந்தது . உன் குடும்பத்திற்கு என்னை அறிமுகம் செய்து சந்தோசத்துடன் என்னுடன் படமும் எடுத்துக் கொண்டாய் . .முகநூலில் நான் எழுதி வந்த "நெஞ்சொடு நான் பேசுகின்றேன்" எனும்  நினைவு காவியத்திற்கு எழுதி முடித்த உடனேயே அதற்கான கருத்துரையையும் ,திருத்தங்களையும் பதிவிட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பனே!! நீ இப்பொழுது எங்கே ? நீ சிறந்த கலைஞன்,நகைச்சுவை ததும்ப உரையாடும் சிறப்பு  .நீ சிரிக்கும்போது உன் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகு  மறக்க முடியவில்லை உன் முகம் .திடீரென்று காலன் உன்னை கவர்ந்து செல்வான் என நான் கனவிலும் கருதவில்லை .நாளை என்பது நிச்சயம் இல்லை .நாணயத்தின் இரு பக்கங்கள் தான் இறப்பும் ,பிறப்பும் என்று தத்துவம் பேசினாலும் வாழ வேண்டும் எனும் ஆசை நம்மை அலைக்கழித்து கொண்டிருக்குமே  நண்பா!! பிறந்தன இறக்கும்  இறந்தன பிறக்கும் தோன்றின மறையும் மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும். உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்.புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்" நீ வாட்ஸ்அப்பில் இரண்டு வருடங்கள் முன்பு  அனுப்பிய பட்டினத்தடிகள் வாழ்வு நிலையாமை பற்றிய  பாடல் வரிகளை எண்ணும் பொழுது  கண்கள் குளம் ஆகின்றன.வினை விளை கால உலகில் வாழ்ந்து வானுலகம் செல்லும் உன்னை அங்கே தெய்வங்களாய் அமர்ந்திருக்கும் உன் பெற்றார் ,உற்றார் ,ஊரவர்கள் ,இன பந்துக்கள் எல்லோரும் வழி மேல் விழி வைத்து வரவேற்க  காத்திருக்கிறார்கள் .  கவலை வேண்டாம்  சென்று வா என் நண்பனே!!இதுவும் கடந்து போகும் எல்லாம் இன்ப மயமே!!உன் ஆத்மா சாந்தி பெற இறைவனை போற்றி வணங்குகின்றேன் . ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!   சிவா .பாலசந்திரன் வட்டாரம்-2, புங்குடுதீவு / டொரோண்டோ ,ஒன்டாரியோ ,கனடா  .