Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 05 SEP 1958
இறப்பு 19 JUL 2022
அமரர் கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன்
வயது 63
அமரர் கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் 1958 - 2022 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியை 18-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:

இல.1674.கே.கே.எஸ் வீதி,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்