

உடுவிலை பிறப்பிடமாகவும் சில்லாலையூரை வதிவிடமாகவும் கொண்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்துவந்த கனகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் இறைவனடி எய்தினார் என்ற துயரமான செய்தியினை பகிர்கின்றோம். அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த கனகக்காவே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பான கனகக்காவே, உங்கள் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உன் உயிரை உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா இறைவனடிசேர ஈசனை பிராத்திக்கிறோம். Langes, Vasanthy, Gajan and Sharujan Brampton Ontario Canada