6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகம்மா இரத்தினசிங்கம்
(மல்லிகா ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 74
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 19-03-2023
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா இரத்தினசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்
அன்பான அம்மாவே!
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே
நிலவை நேசித்தேன்!!
மறையும் வரை....
கனவை நேசித்தேன்!!
காலை வரை...
இரவை நேசித்தேன்!!
விடியும் வரை...
தாயே உன்னை நேசித்தேன்!!
என் உயிர் உள்ளவரை.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
வாணி, குடும்பத்தினர்