அம்மா!! வாழ்கையில் எனக்கென்றிருந்த ஒரே ஒரு ஆதாரத்தை - என் அம்மாவை காலம் பறித்துவிட்டது. வசந்தா வசந்தா என்று நிமிசத்துக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொண்டிருந்த என் அம்மாவின் குரல் ஓய்ந்து போனது. ஆறுதல் என்ற ஒன்றை இனி எங்கே போய் தேடுவது என்று எனக்கு தெரியவில்லை அம்மா. ! ஆனால் நீங்கள் அப்பாவுடனும் அண்ணாவுடனும் அம்மம்மாவுடனும் மற்றும் உங்களுக்கு பிரியமான உறவினர்களுடனும் கலந்துவிட்டீர்கள் என்று புரிந்தாலும் நான் இங்கே தனித்துவிட்டேன் அம்மா..அதை தாங்கமுடியவில்லை. இனி என்றைக்கும் அந்த துயர் போகவே போகாது. சிறிய வயதிலிருந்தே உங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும் பின் எங்களுக்காவும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்காவும் தான் வாழ்ந்தீர்கள். இனி போதும் என்று நினைத்து ஓய்வெடுத்துவிட்டீர்கள் என்று புரிகிறது அம்மா! இன்னொரு பிறவி என்பது உங்களுக்கிருக்குமானால் என் பேரப்பிள்ளையாக நீங்கள் பிறப்பீர்கள் என்று என் மனம் நம்புகிறது..அது பைத்தியக்கரத்தனாமக இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை தான் இனி என்னை உங்கள் இழப்பிலிருந்து மீளச்செய்யும். அது வரை உங்களின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!