யாழ். வேலணை ஆலப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
எங்கள் சந்ததியின் சிரேஷ்ட புத்திரி
திருமதி கனகாம்பிகை சண்முகராஜா அவர்கள் சென்ற வருடம்
இதே நாளில் இலண்டனில் தனது வாழ்க்கைப் பயணத்தை
நிறைவு செய்து சிவபாதம் எய்தினார்.
எங்கள் குடும்பத்தின் ஆணி
வேராய் ஆழம் நின்று
ஆலமரமாய் எம்மை காத்து வளர்த்த
எங்கள் அம்மா, அக்கா, அம்மம்மா,
பூட்டி & மற்றும் அப்பம்மாவாகிய
திருமதி கனகாம்பிகை சண்முகராஜா அவர்கள்
இறைபாதம் எய்தி அதற்குள் ஒரு வருட காலமாகிவிட்டது
என்று நம்பவே முடியவில்லை.
பூதவுடலால் அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும்
என்றென்றும் நினைவால் எங்களோடு தான் இருப்பார்
என்றாலும் அவருடைய மறைவின் தாக்கத்திலிருந்து
எமது குடும்பத்தினர் இன்னமும்
மீளமுடியாமல் தான் தவிக்கிறோம்.
அன்னாரின் மறைவின் போது இரங்கல்கள் தெரிவித்த,
எமக்கு ஆதரவாயிருந்த உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும் எமது நன்றியை இதன் மூலம்
சமர்ப்பித்துக் கொள்கிறோம்.