நன்றி நவிலல்
பிறப்பு 05 MAY 1944
இறப்பு 14 MAY 2021
அமரர் கனகமணி வைரவநாதன் 1944 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரவநாதன் கனகமணி அவர்களின் நன்றி நவிலல்.

அம்மாவின் அன்பு ஆகாயத்தைவிட உயரமானது!
அம்மாவின் பாசம் பூமியை விட அகலமானது
உதிரத்தை உயிராக்கிய உணர்வோ
இரண்டையும் விட ஆழமானது 

ஆயிரம் கனவுடன் கண்டம் கடந்து
எமை கரை சேர்த்து திரை ஆனாய்!
இல்லை என்ற போதும் எம்மனதில்
இறுதிவரை இறைவன் ஆகிறாய்!

ஈரவிழியுடன் விடை பெற்று
ஈடு செய்ய முடியாத இழப்பானாய் அம்மா!
உடை உடுத்தும் அழகே கண்ணீரை 
வரவழைக்கிறது
ஊர் சுற்றி 
பார்க்க நினைத்த நினைவே நிழலானது
ஏணியாய் சலிக்காமல் எமக்காக உழைத்தாய்
ஏனே நாம் வாழ்ந்த காலம் 
தென்றலானது!

ஐயப்பனுக்கும் மணி கட்டினாய்
சரியாத நினைவு ஒன்றையும் நினைக்க முடியவில்லை
நீங்கள் ஓடி ஓடிவலம் வந்த வீடு காடாய் தெரிகிறது
கால் பதித்து ஏறிய கார் காலியாய் காட்டியளிக்கிறது.

வழிமீது பாதம் வைத்து நடக்க வைத்த தெய்வம்!
வாழ்வில் தவறான பாதையில் போகாமல்
வழிகாட்டிய ஒளி விளக்கு!

விழி நீரோடு விடை பெற்ற தாய்
வீடு, வாசல், பிள்ளைகள் என
எம் வாழ்வை வளம் பெற செய்த அன்னை!

25 வருடங்கள் பனியிலும் குளிரிலும்
நீங்கள் கடந்து வந்த பாதையின் வாழ்வில்
உயரத்தில் வைத்தீர்கள் அம்மா
திரும்பிப் பார்க்கையில் சரியாத 
ஏணியானாய் அம்மா
தொட்டில் முதல் கடைசிவரை
ரயில் போல் தொலையாத நினைவு வலி!

வாழ்த்திய வாழ்வில் சிரித்தாய் அம்மா
விபத்தில் துணையாய் இருளிலும்
ஒளியான நிழலாய் வாழ்வை தந்த அம்மா 
தலை அணையாய் இருந்தாய்!
எம் தலை சாயும் வரை நிலையாய் இருப்பாய்
தாளாத நினைவில்!

திகட்டாத வாழ்வில் திசை எல்லாம்
தீயாய் சுடுகிறது நாம் சொன்ன வார்த்தை
துன்பத்திலும் இனிமையாக வறுமையிலும் செழிமையாக
தூர தேசம் போனாலும் துணிவோடு செல்வீர்கள்
தென்றாலாய் வாழ்ந்த போதும், தெய்வமே ஆனபோதும்
தேயாத நிலவாய் தெரிகிறீர்கள்!

தினம் தேடி தேடி ஒலித்த தொலைபேசியும் இனி இல்லை
தீபாவளி, தைப் பொங்கள், பிறந்தநாள் என
எப்பவும் வாழ்த்தும் தாய் விழி நீரோடு விடை பெற்றாள்.

வாழ்த்தவும் எமை பார்த்து சந்தோஷம் படவும்
அம்மா இனி எமக்கு
இல்லவே இல்லை அட்சய திதியில்
ஆண்டவனிடம் 
சரணடைந்தாய்.
ஓம் சாந்தி...!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்