யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதன் கனகமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-06-2022
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் கொடுத்தாய்
ஆற்றலுடன் எனை வளர்த்தாய்
ஆயிரம் உறவுகளுக்கு ஆலமரமாய்
இறைவன் எமக்கு கொடுத்த
முதல் முகவரி நீ அம்மா!
பத்து மாதம் கருவறையில்
சுமந்த உன்னை,
பகலிரவாய் நான்
சுமக்க நினைக்கின்றேன்
என்னோடு நீ இல்லை
உங்கள் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமக்க வைத்து
எமை விட்டு எங்கு சென்றீர் !
கண் மூடி பார்த்தாலும்
கண்களை திறந்தாலும்
கனவிலும்
என் அன்னையே!
வேலையால் வரும் வரை
கால் கடுக்க நின்று கதவை திறந்து
பார்த்த முகம் காணோம்!
இனிப் போதும் என்று
நினைத்தோ
கல்லறையில் உறங்கச் சென்றீர் !
வருடம் ஒன்று கடந்தாலும்
உன் நினைவுகளை
கடக்க இயலாமல்
நீ விட்டு
சென்ற இடத்தில் நாங்கள்..
நீ இல்லை என்ற பின்னும்
ஏனோ
எங்கள் மனம்
இரவும் பகலும் அலைகிறது
பிரிந்து போன நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
கண்ணுக்குள்
வந்து கொண்டு
தான் இருக்கும்
உங்கள் வீட்டின் மேல் உன்
திருமுகம் கண்டேனம்மா
உன் ஆசை வீடு மிளிர்கிறது
உங்கள் நினைவுகள் வதைக்குதம்மா
ஆண்டு ஒன்று அல்ல
நீ கொடுத்த உயிர் உள்ளவரை
உன் நினைவுகளுடன் நாங்கள்....
உன் ஆத்மா சாந்தி
அடைய
இறைவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!