4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம்
வயது 86
அமரர் கமலராணி சுந்தரராமலிங்கம்
1935 -
2021
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
59
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா 4
ஆண்டுகள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!
தகவல்:
குடும்பத்தினர்