Clicky

பிறப்பு 12 MAY 1939
இறப்பு 21 DEC 2025
திருமதி கமலாதேவி செல்வராஜா
வயது 86
திருமதி கமலாதேவி செல்வராஜா 1939 - 2025 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான ராணி அன்ரி, உங்கள் பிள்ளைகள், சகோதரர் குடும்பத்தினர் அனைவருக்கும்... தெல்லிப்பளையில் உங்களுக்காகக் கடவுள் தந்த ஒரேயொரு பாசம்மிகு அயலவரான... றூபி அக்கா குடும்பத்தினர், எமது ஆழ்ந்த கவலைகளையும், அனுதாபங்களையும் எல்லோருக்கும் தெரிவித்து நிற்கின்றோம். உங்களை நாங்கள் நினைக்காத நாட்களில்லை... ஏனென்றால் நம் இரு குடும்பங்களும் எம் மகிழ்விலும், துக்கத்திலும் தெல்லிப்பளையில் ஒன்றாகவே வாழ்ந்தோம்... வளர்ந்தோம்... காலத்தின் கட்டளை எம்மைப் பிரித்தாலும் இனியபல நினைவுகளுடன் நாம் பயணிக்கவேண்டுமென்பதே படைத்தவராம் பரம்பொருளின் அன்புக்கட்டளை. உங்களையும், உங்கள் குடும்பத்தினர் பலரையும் பண்படுத்திக்... கனடாவின் பல வண்ண நிலங்களில் காத்து வழிநடத்தும் அதே இறைவன் பரகதியின் சேனையில் அவருக்குரிய ஞாயிறு தினத்தில் உங்களையும் இணைத்து பேரருள் பாலித்தமைக்குப் பெருநன்றி கூறுகின்றோம். அன்பான, பண்பான உங்களதும், உங்கள் இனிய கணவரதுமான கிராமத்தின் பிள்ளை, நாட்டின் பிள்ளை, உலகத்தின் பிள்ளை ஆகியோருடன் சுடச் சுட... தெல்லிப்பளை நினைவுகளை மீட்டிப் பயணிப்போம்... என்றும்!
Write Tribute