யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை , கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
In Loving Memory Of
KAMALADEVI SELVARAJAH
Please join us for the 31st-day memorial, followed by a lunche on.
Date & Time: Saturday, 24 January 2026 11:30 a.m.
Venue: Sathya Sai Baba Centre
(Basement Hall)
5321 Finch Ave E
Scarborough ON - M1S 5W2
அன்னாரின் 31ம் நாள் நினைவு அஞ்சலி 24-01-2026 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் Sathya Sai Baba Centre(Basement Hall5321 Finch Avenue East Scarborough, ON M1S 5W2 எனும் முகவரியில் நடைபெற உள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
*********************************************************************
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய்
பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும்
ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழிகாட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய்
எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அம்மா......!!!...!!
எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We take this opportunity to express our heartfelt gratitude to all who attended the funeral and shared their thoughtful messages, phone calls, tributes, floral wreaths, and generous offerings of food during this difficult time.