12ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை சிவலிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பன்னிரண்டு போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் ஐயா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I miss you grandpa you will always remain in my heart