11ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை சிவலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு ஐயாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
ஆண்டு பதினொன்று ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை ஐயாவே!
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
செல்வ சந்நிதி முருகனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
I miss you grandpa you will always remain in my heart