யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாயபிள்ளை சிவலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-09-2023
எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதேஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் திதி தினமான 11- 09-2023 திங்கட்கிழமை அன்று கதிரிப்பாய் ஞானவைரவர் கோவிலில் மதியபோசனம் வழங்கப்படும், அத்தருணம் உற்றார் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you grandpa you will always remain in my heart