3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசபிள்ளை சீவரத்தினம்
(பஞ்சலிங்கம்)
முன்னாள் ஆசிரியர் யாழ் மத்திய கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி
வயது 72
அமரர் கைலாசபிள்ளை சீவரத்தினம்
1950 -
2023
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சீவரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள இ
றைவன் அழைத்தானோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்