யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சீவரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு
என்னை திகைக்க வைத்தவரே!
துன்பத்தில் தோள்
கொடுத்து தூக்கியவரே !
துயரத்தில் துவண்ட போதெல்லாம்
துயர் துடைத்தவரே !
நான் அயராது உழைத்த
நாழியெல்லாம்
துணை நின்றவரே !
என் முடிவுகள் எதுவாயினும்
என்னோடு
குரல் கொடுத்தவரே !
சில நேரங்களில் ஆச்சிரியங்களில்
என்னை
திகைக்க வைத்தவரே !
தோல்விகளால் உடைந்த
போதெல்லாம்
ஊக்கம் தந்தவரே !
வெற்றிகள் நான் சில கண்டிடவே
வெகு நாட்கள்
தவம் இருந்தவரே !
வேதனைகள் வேர் வரை சென்றாலும்
விழுதுகளாய்
என்னை தாங்கியவரே !
என் வாழ் நாள் முழுதும் நீங்கள் இன்றி
சிறு துறும்பும் அசைந்ததில்லை
உன் பிரிவால் வாடும் அன்பு மச்சான் மற்றும் குடும்பத்தினர்!!!