என்றும் என் நினைவில் நிலைத்திருக்கும் எனது அன்பு நண்பனே ! நீ எம்மையெல்லம் விட்டுப் பிரிந்து ஒரு மாதமாகி விட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உனது மறைவின் பின்புதான்,மேலும் உன்னைப் பற்றிய தகவல்களை அறிந்து வியந்து போனேன். யாழ் மாவட்டத்தில் அதிசிறந்த பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரியில் ந் கல்வி கற்றதையும் பாடசாலையின் உடைபந்தாட்டக் குழுவின் தலைவனாக நீ செயற்பட்டதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அத்துடன் நீ பேராதனைப் பல்கலைகழகத்தில் கல்வி கற்றதையும் அறிந்து மகிழ்ந்தேன்.இவற்றையெல்லம் எம்முடன் பழகிய காலத்தில் நீ வெளிப்படுத்தவேயில்லை. சகல விடயங்களை அறிந்த அறிவாளியாக நீ இருந்தும்கூட எங்களில் ஒருவனாகவே நீ இருந்தாய். தற்பெருமை கொண்டவனாகவோ அல்லது தற்புகழ்ச்சி பேசுபவனாகவோ நீ என்றுமே இருந்ததில்லை.இதையெல்லாம் எண்ணும்போது உன்மீது நான் வைத்திருந்த அன்பும் அபிமானமும் மேலோங்கி நிற்கின்றன தழும்பாத நிறைகுடமாக நீ இருந்ததை எண்ணிப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. உனது கனிவான குரல் இன்னும் எனது காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. உனது பிரிவை என்னாலேயே தாங்கிக்கொள்ள முடியாத போது உனது அன்பான மனைவி, மகன், மகள், மற்றும் மருமகன் ஆகியோருக்கு என்னால் எவ்வாறு ஆறுதல் கூர முடியும்? உனது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி, ஓம்சாந்தி, ஓம் சாந்தி
We are deeply heartbroken by the loss of your father. Sending our deepest condolences throughout this difficult time.