3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி
வயது 77
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம்
1943 -
2021
சிறுப்பிட்டி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கு புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை மகேசலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது காண்போம் அப்பா...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்