31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 JUL 1938
இறப்பு 04 JUL 2021
அமரர் கைலாசபதி மகேஸ்வரி
வயது 82
அமரர் கைலாசபதி மகேஸ்வரி 1938 - 2021 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டி வடக்கு பெற்றாவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா என்றழைத்திட மனம் திழைக்குதே
மகனே என்றழைத்திட இன்று நீ இல்லையே
என்றெண்ணி என் உயிர் உருக்குதே....
கண்கள் நீர் பெருக்குதே....

உதிரம் விட்டு என் உயிர் தந்த அன்னையே..
சிறு துளிரான என்னை இவ்வுலகில் உருவாக்கி
சிற்பி போல் கச்சிதமாய் ரசித்து வடிவமைத்து
வாழ்க்கையின் பல படிகளில் நான் ஏற
என்னுடன் துணையாய் வந்தாயே தாயே....
இன்று விருட்சமாய் கிளைவுட்டு நின்றாலும்
உன் கைகோர்த்து கொண்டாட ஆசையாய்
உனைத்தேடி அலைகிறேனே,
எனை ஏமாற்றி வெகுதூரம் சென்று
மறைந்தது தான் ஏனோ....
மீண்டும் ஒருமுறையேனும்
உன் முகம் காணும் வரம் பெறேனோ...

கொடிமரம் சாய்ந்தது போல்
எமைவிட்டு மறைந்தீரே....
மாதம் ஒன்று ஓடி மறைந்தாலும்
மறப்போமா உம்மடி வாசம் அன்னையே....

ஒருமுறை நான் அழுதாழும்
தாங்காது துடித்திடுவாயே அம்மா...
இன்று உன் நினைவால் தேம்பி அழும்
என் விழிகளுக்கு ஏது அம்மா விடை...
ஆருதல் சொல்ல தாயுமில்லை
மனமார சாய்ந்துறங்க உன் மடியுமில்லை
இனி எப்போது கேட்பேன்
அம்மா உன் குரல்...
கைகோர்த்து நடக்க கூட
இனி இல்லையே உன் நிழல்...

உன் நினைவுகளோடும்
கண்களில் கண்ணீரோடும் ஏங்கி நிற்கும் உன்
அன்பு பிள்ளைகளின் தவிப்பு!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முகவரி:
Name - Gengatharan(Son)
Address - 54 /7 Sri Siddartha Road, Kirillapana, Colombo 06.
+94774375097

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.