1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1938
இறப்பு 04 JUL 2021
அமரர் கைலாசபதி மகேஸ்வரி
வயது 82
அமரர் கைலாசபதி மகேஸ்வரி 1938 - 2021 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி வடக்கு பெற்றாவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாசபதி மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-06-2022

தாயே...

அன்புக்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீர்கள்...
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல புரிந்தீர்கள்....
துன்புற்றோர் துயர் துடைத்து அடைக்கலம் அளித்தீர்கள்.

பொன்னுச்சாமி சோதிமுத்து பெற்றெடுத்த ஆசை மகளாம் நீயே....
வளமான வாழ்க்கையை எமக்களித்த
 எம் குடும்பத்து அழகு திருவடியே.

பட்சி என்று இனிமையாய் அழைக்கப் பெற்ற
 எங்கள் குல அகல் விளக்கே...
 சுழல்காற்று அணைத்ததோ எம்மிடமிருந்து உன்னை...
ஆண்டவா! இனி யாரை அழைப்போம் அம்மா என்று...

எம்மோடு நீ வாழ்ந்த காலங்கள் சரித்திரமாய் ஆனதம்மா...
 உன் புன்னகை முகம் எம்மோடு என்றறென்றும் உயிர் வாழும்...
பூவுலகை விட்டு நீங்கள் விடைபெற்றாலும்
 எம் மனதை விட்டு அகலாதிருப்பீர்கள்.

தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று வல்வை முத்துமாரி அம்மன்
 திருவடியை அடைய வேண்டுகிறோம்...
விழிநீரோடு உன்னை வழியனுப்புகிறோம்.

அம்மா, உன் ஆத்மா சாந்தியடையட்டும்!
 எம் உயிர் உள்ளவரை உன் ஜீவன் எம்மோடு கதை பேசும்!

தகவல்: குடும்பத்தினர்

Photos