யாழ்ப்பாணம் வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெஸ்டின் ராதா பஸ்தியாம்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உம்மோடு செலவழிக்க எண்ணினேன்- இன்றோ
நீங்கள் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!!
கண்களில் எம்மைச் சுமந்த நீங்கள்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர்கள் காற்றில்!!
தனித்திரு, விழித்திரு, விலகியிரு என்று
இப்பொழுது கொரனாவிற்கு சொல்கிறார்கள்
ஆனால் இவை நீங்கள் மறைந்த மூன்று ஆண்டுகளாக
எங்களுக்கு நடக்கின்றது
எங்கே உங்களுடன் பழகியவர்கள்
எப்போ கேட்போம் உங்களது வேடிக்கையான பேச்சை
எப்போ காண்போம் உங்களது சிரித்த முகத்தை
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழும்
மனைவி, பிள்ளைகள்.
Anna Show me a sign, whether to erase your contact number, but don't call me now. I know Peter and God will be bald in 3 yrs, don't overdo, so they may escape from a braggart to earth. We miss you....