Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1984
இறப்பு 13 MAY 2013
அமரர் ஜோதினி இராஜ்குமார்
வயது 29
அமரர் ஜோதினி இராஜ்குமார் 1984 - 2013 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதினி இராஜ்குமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அலையும் அடித்து ஓய்ந்ததம்மா
காற்றும் வீச மறந்ததம்மா
கடவுளும் கருணையின்றிப் போனானே

நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
மதுரமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ...!

என் செய்வோம் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது....?
இளமையில் எமைப் பிரிந்தாய்
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களின் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices