Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1984
இறப்பு 13 MAY 2013
அமரர் ஜோதினி இராஜ்குமார்
வயது 29
அமரர் ஜோதினி இராஜ்குமார் 1984 - 2013 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதினி இராஜ்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுவரை எம்மோடு இருந்த நிரோ இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு பத்து
வந்தும் ஆறமுடியவில்லை!

அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே ஜோதினி
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!

உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.

உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!

விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices