Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 2003
இறப்பு 05 FEB 2023
அமரர் ஜோசப் அனோஜன்
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர், DHL WHARE HOUSE SUPERVISOR
வயது 19
அமரர் ஜோசப் அனோஜன் 2003 - 2023 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் அனோஜன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு 3 கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!

இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!

நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?

நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு 
விரைந்து ஆண்டு மூன்றென்ன ஆயிரமே 
ஆனாலும் ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!

ஈன்று புறம்தந்த அன்னையவள் பரிதவிக்க
 உனைச் சான்றோனாக்கிய தந்தையும் 
கதறியழ அன்பினால் இணைந்திருந்த
 உடன் பிறப்புகளும் தடுமாற உற்றமும் 
சுற்றமும் தவித்துநிற்க பூதவுடல் விடுத்து
 நீ தூயவுடல் ஏகியதேன்!

எமக்கு எல்லாமாக இருந்தவனே- இன்று
 நாம் துடுப்பிழந்த படகாகித் தவிக்கின்றோம்
 எம் நெஞ்சிருக்கும் வரை உன் இனிய
 நினைவுகளும் நீங்காமல் அங்கிருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices