1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜோசப் அனோஜன்
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர், DHL WHARE HOUSE SUPERVISOR
வயது 19
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் அனோஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-01-2024
மலர்ந்த பூவொன்று
வாசனையை பரவச் செய்து
வசந்தத்தை பறித்துச் சென்றது .....
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்விகளோடு தொடர்கின்றது
எம் கண்ணீர் பயணம் .....
ஏக்கம் மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....
காலங்கள் கரைந்தாலும் ஆயிரம்
உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
எம் கண்களில் ஒளிரும்
உங்கள் அன்பின் வெளிச்சம் .......
உங்களைப் பிரிந்த நாள் முதல்
இன்று வரை, உங்கள் அன்பிற்கு
இணை யாருமில்லை உங்கள்
பாசத்திற்கு ஏங்கும் எங்கள்
ஏக்கங்கள் உணர முடியாத வலியாய்
எங்களை கொல்கின்றது.
நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில்
உம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.!!!!!
தகவல்:
குடும்பத்தினர்