பிறப்பு 07 MAR 1932
இறப்பு 16 AUG 2021
திருமதி ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture- திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
வயது 89
திருமதி ஜெயராணி இராஜேந்திரா 1932 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அமலன்-வசந்தா குடும்பம் 27 AUG 2021 United Kingdom

அம்மாவிற்கு நன்றி ……. அன்பெனும் வடம் தொடுத்து, அகம் குளிரும் புன் சிரிப்பெடுத்து, அத்தனை மனங்கள் மகிழ, அன்புடன் அணைத்த, அம்மாவிற்கு நன்றி. அன்னையின் மடியன்றி, அடைக்கலம் வேறெங்கே, அச்சமுடன் அலைந்திடாமல், அமைதிக்கு இடம் தந்த, அம்மாவுக்கு நன்றி. கற்றலே எமக்கெல்லாம் கடைசி வழி, கற்பதுவும் இனிய அனுபவமென, கனிவு காட்டியதைக் கவர, நிறைவழி சொன்ன, ஆசிரியைக்கு நன்றி. உபசரிப்பு என்பதே உவந்தளித்தலாகும், நாவூறும் நல்லுணவை நன்றே, அன்பெனும் அமுதம் கலந்து செய்து, ‘ஆ’ வென்ற வாய்க்கூட்டிய, அன்னைக்கு நன்றி. கர்த்தரன்றி கதியேது நமக்கெலாம், காத்திரமாய் கை பிடிக்க வேறேது, ஆண்டவனே அடைக்கலமென சரண்புக, அமைதி வழி காட்டிவிட்ட, அன்னைக்கு நன்றி. வாழ்நாளெல்லாம் ஒர் நாளில் முற்றும், பிறந்தோம் வாழ்ந்தோம் என்பது பொருட்டல்ல, வாழ்நாளில் எப்படி வாழ்ந்தோம் என்பதாம். வழிகாட்டியாய் வாழ்ந்திட்ட, மாதாவிற்கு நன்றி. சென்று வா அம்மா நாமெல்லாம், மீண்டும் சந்திப்போம் இன்னோர் நாளில், நன்றாம் அதுவரையில் அமைதியில், ஆனந்தமாய் துயில் கொள், நன்றி அம்மா.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 21 Aug, 2021
நன்றி நவிலல் Wed, 15 Sep, 2021