பிறப்பு 07 MAR 1932
இறப்பு 16 AUG 2021
திருமதி ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture- திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
வயது 89
திருமதி ஜெயராணி இராஜேந்திரா 1932 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Tribute Message
Mrs Jeyarani Rajendra
சாவகச்சேரி, Sri Lanka

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , இந்த நாளிலும் கர்த்தருக்குள் நித்திரையடைந்த அருமையான ஜெயராணி இராஜேந்திரா அவர்களைப் பற்றி சில வார்த்தைகளை எழுதுவதில் மகிழ்ச்சி. ஏனென்றால் மானிப்பாயில் நான் போதகராக இருந்த வேளையில் இவர்கள் அங்கு ஆராதித்து வந்தார்கள். அவர்கள் மிகுந்த பக்தி வைராக்கியம் கொண்டவர்கள் மட்டுமல்ல தேவன் பேரில் மிகுந்த பற்றுதல் ஆனவர்கள். அநேக காரியங்களை குறித்து ஜெபித்து முடிவெடுக்கிறவர்களாக அவர்கள் இருந்தார்கள்.தேவனுக்கு பயந்த ஒரு சகோதரி ஆகவே 89 ஆண்டுகள் கர்த்தரோடு நடக்கவும் இப்பொழுது ஆண்டவருடைய மடியில் இளைப்பாற தேவன் செய்த கிருபைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து இலங்கை வந்தபோது என்னை தேடி வந்து சந்தித்தார்கள். அத்தனை அன்புள்ளம் , ஊழியக்காரரை மறவாத ஒரு சகோதரி . உண்மையில் மாம்சத்தில் துயரம் இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் மீண்டும் அவரை சந்திப்போம் என்று கிறிஸ்துவுக்குள் மகிழ்கிறோம். கர்த்தர் அவருக்கு கொடுத்த இரட்சிப்புக்காக கர்த்தருக்கு நன்றி. அவருடைய பலத்த சவுரியவான்களாகிய தூதர்கள் தாமே உங்கள் யாவரையும் ஆறுதல் படுத்துவாராக. This is not a funeral this is a farewell. Bye Aunty let's meet you soon

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 21 Aug, 2021
நன்றி நவிலல் Wed, 15 Sep, 2021