யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜெயராணி அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறேட் பிரான்சிஸ் ராசு குணரத்தினம் ராசு தம்பதிகளின் அன்பு மகளும், திருச்செல்வம் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மானுவேல்(ரட்ணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
லூட்சியா அவர்களின் அன்புத் தாயாரும்,
லூத்து பாலச்சந்திரன்(யாழ்ப்பாணம்), றெஜீனா சிவஞானம்(Neuss- ஜேர்மனி), டெக்ஸ்டர்(ஜெறிம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(ஜேர்மனி), மைக்கல்(யாழ்ப்பாணம்), ஜெயராஜகுலேந்திரன் கில்டா(யாழ்ப்பாணம்), யோசப்(ஜேர்மனி), அலெக்ஸ் லம்பேட்(ஜேர்மனி), அன்ரன்மெல்(ஜேர்மனி), லிப்டன்(லண்டன்), கட்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெக்ஸ்டர் எமிலி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.