
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வூப்பெற்றால் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே!
கண்ணிறைந்த நீரோடு
உங்கள் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றீர்கள்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும்
யாசிக்க உங்கள் நினைவுகள்
இருந்தால் போதும் அன்பே!
நமக்காக யோசிக்க ஒரு வாழ்க்கை துணை
இருக்கின்றது என்பதை உணரும் போது
எம்மை விட்டு பிரிந்து விட்டீர்கள்...
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள்
முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும் கண்
விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்...
புன்னகை பூ ஒன்று பூக்காமல்
உதிர்ந்தது சில்லறை சிதறும்
சிரிப்பழகி சிலையாய் தூங்குகிறாள்...
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஆண்டுகள் சென்றாலும் உங்கள் உடல்
மட்டும் தான் அழிந்தது தங்கமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் என்றும்
உங்கள் நினைவுகளோடு அன்புடன்
அம்மா, கணவர், பிள்ளைகள்,
சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள்
Our heartfelt condolences to Jeyanthy's family