திதி : 16-12-2023
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் சுஜன்த் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
விண்ணோரும் தினம்வியந்த எம் திருமகனேஏனோ? நாம் எல்லோரும் தினம்கலங்க வைத்து போனது ஏனோ?அன்று விண்ணோரும் - உனை கவர்ந்து சென்றது தான் ஏனோ?
அன்பு என்னும் பறவை சிறகடித்து வானில் பறந்தது!விதி என்னும் அம்பினால்அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்இறந்திடவா நீ பிறந்தாய்! நீ ஆண்ட கதை அழிவதில்லைநீ எங்கே சென்றாய் தனியே!
நொடிப்பொழுதில் எம்மை தவிக்கவிட்டு எங்குதான் முகவரி இல்லாத இடத்திற்குதன்னந் தனியே சென்றாயோ!
உன் பிரிவை நினைத்து எங்கள் கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!