5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயக்குமார் சுஜன்த்
Student of Whitmore High School
வயது 14
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் சுஜன்த் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
கடவுளும் கல்லாய் போனானே
எம் செல்லம் கால் பதித்த போது
காத்திருந்து காலனவன் சதி செய்தானே?
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!
விளையாட்டில் வீரனாய்
கால் பந்தில் கால் பதித்து
வீறுடன் வெற்றிநடைபோட
நீ கண்ட கனவு எங்கே மகனே!
நிறைவேறா உன் ஆசைகளோடு
விரைவாக ஏன் பிரிந்தாய்
இவ்வுலகை விட்டு....?
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது....?
உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கும்.
தகவல்:
குடும்பத்தினர்