1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெயக்குமார் காந்திமலர்
வயது 77
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
அத்தனையும் ஊட்டி வளர்த்த தாயே
அம்மா என் உயிர் உள்ளவரை
உனை நினைத்து வாழ்ந்திருப்பேன்
அம்மாவே அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
தினம் தினம் பூசிப்பேன்.....தாயே
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி..
தகவல்:
குடும்பத்தினர்